Wednesday, September 24, 2025

சாம்பலின் சங்கீதம் முன்பதிவு

 






Those who cannot remember the past are condemned to repeat it" - George Santayana

இரண்டாம் உலகப்போர், பல  உலக நாடுகள் பங்கேற்று, ஆயுதங்களை உருவாக்கவும், பேரழிவுகளை கொணரவும் அதிகார பூர்வமாக செயல்படுத்தப்பட்ட வரலாற்று சம்பவம். 

 இதன் இறுதிகட்டத்தில் நடந்தேறிய தாக்குதல்கள் மனித குலத்தை உலுக்கி ஸ்திம்பிக்க செய்தது. ஜப்பான் நாட்டின் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகள், நொடிப்பொழுதில் ஏற்படுத்திய சர்வநாசத்தால் இவைகளை எமனின் ஆயுதங்களாக பார்த்தனர்.

அணுகுண்டுகளை உருவாக்க வேண்டிய அவசியத்திற்கான காரணம் என்ன? இவற்றின் தயாரிப்புக்கு ரகசியமாக பங்காற்றியவர்கள்  யார்? ஆயுதத்தின் சக்தியை முதன்முதலில் போரில்  பயன்படுத்த  வேண்டிய சூழ்நிலை ஏன் வந்தது? 

ப்ரெஞ்சில் Alcante, Bollée என்ற இரு கதாசிரியர்கள், Rodier என்ற சித்திரக்காரருடன்  இணைந்து உருவாக்கியுள்ள "La Bomba" என்ற கிராபிக் நாவல் அணுஆயுத என்ற அறிவியல் சக்தியின் உருவாக்கவமும், அதன் தயாரிப்புக்கு வித்திட்ட நிகழ்வுகளையும், அதன் பின்னனியில் உள்ள உலகம் அறிந்திடாத மாந்தர்களையும்  சொல்லிட விழைகிறது. 

18 மொழிகளில் வெளிவந்து பல விருதுகளை வென்றுள்ள இந்நாவல் தமிழில் எழுத்தாளர் திரு. கார்த்திகை பாண்டியன் அவர்களின் மொழிபெயர்ப்பில், லயன் மற்றும் முத்து காமிக்ஸின் எடிட்டர் திரு. S. விஜயன் அவர்களின மேற்பார்வையில் "சாம்பலின் சங்கீதம்" என்று தலைப்பிடப்பட்டு வெளிவர உள்ளது. 

சமீபத்தில் "பெட்ரோ பராமா" என்ற  நாவலின்  மொழிபெயற்புக்கு சிறந்த மொழியாக்கம்  விருது கார்த்திகை பாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

41 ஆண்டுகளாய் ஐரோப்பாவின் பல சிறந்த காமிக்ஸ்களை தமிழில் வெளியிட்டுள்ள திரு. விஜயன் அவர்கள் இந்த ஆண்டு ஜூன் மாதம்  The Road எனும் கிராபிக் நாவலை தமிழில் சிறந்த ஆக்கமாக தந்துள்ளார். 

முற்றிலும் முன்பதிவுக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கான பிரதியை முன்பதிவு செய்திட கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தவும்

https://lion-muthucomics.com/pre-booking/1381--sambalin-sangeetham-pre-booking-for-tn.html

மேலும் தகவல் அறிந்திட லயன் காமிக்ஸ் அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

லயன் ஆபிஸ் வாட்சப் நம்பர் : +91 98423 19755






Monday, June 23, 2025

பயணம்




ஞாயிறு மாலை(ஜூன் 15) ஆரம்பித்து புதன் மாலை முடித்தேன்


தொடர்ச்சியாக படிக்க என் மனதால் இயலவில்லை. காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகளை உபயோக்காமல் சித்திரங்களால் கதைக்குள் இழுத்து பயணிக்க வைத்துள்ளார் Manu Larcenet

எங்கும் வறட்சி, உணவு உருவாக்கிட வழியில்லை, குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லை, வெட்ட வெளியில் படுத்து தூங்கிட பாதுகாப்பும் இல்லை, இப்படிதொரு உலகில் தன் மகனை ஜீவித்து வைப்பதும் மட்டும் இல்லாமல், சுயமாக வாழ வைக்கவும் விழைந்திடுகிறார் இங்கே ஒரு தந்தை. பெயர்கள் ஒரு பொருட்டாய் இல்லை

மனிதன் உருவாருக்கி பெருமையாய் நின்ற கட்டிடங்கள், பொருட்கள் சீந்தாவாரற்று நிர்மூலமாகி கரிசலகளாக காட்சி அளிக்கின்றன். கதையிலும் குளிர், இக்கதையினை படித்திட்ட வேளையில் கொவையிலும் குளிர், அதனால் என்னமோ குளிரை உணர்ந்த மாதிரி இருந்தது😌😌😌

 காட் பிராமிஸ் என்று அச்சிறுவன் தன் தந்தையிடம் சத்தியம் கேட்டபோது எங்கே இருந்து வந்தது இந்த நம்பிக்கை என ஒரு நிமிடம் ஸ்தம்பித்தேன். அவன் வயதில் ஓடியாடி விளையாட ஒன்றும் இல்லை, பொம்மை இல்லை, நண்பர்கள் இல்லை, அவனை உற்சாகமாக்கிட எதுவுமே இல்லை, எந்த நம்பிக்கையில் அவன் தந்தையிடம் அப்படியொரு வார்த்தையை உபயோகித்தான், அவன் தந்தை அவனிடம் இதற்கு முன்னர் தன் சத்தியத்தை காக்கும் பொருட்டு இதை சொல்லி இருந்தாலும், நம்பிக்கை இழக்காமல் அச்சொற்களை உதிர்த்த அவன் மனது. இங்கு இறை நம்பிக்கை பற்றி நான் கூற வரவில்லை, ஒரு சோதனை வந்தாலே, இறைவன் இருக்கிறாரா என கேட்கும் மனிதர்களிடையே, எதுவும் இல்லாத உலகில் நம்பிக்கை கொண்ட அச்சிறுவனின் மனது என்னை உலுக்கியது.

இரு பூட்டுகள் இக்கதையில் காட்டப்படுகிறது. ஒரு பூட்டு  திறக்கப்படும் முன்னே, சிறுவனுக்கு ஏற்படும் எச்சரிக்கை உணர்வு, ஆபத்தை உணர செய்யும் நிலைக்கு வளர்ந்த விட்ட அவனது உள்ளூணர்வை காண்பிக்கிறது. இரண்டாவது பூட்டை திறக்கும் போகும் முன் பயத்தில் வேண்டாம் என சிறுவன் தயங்கி கெஞ்சி நிற்க, அவன் தந்தை அவனிடம் ஒன்று தந்திட்ட வலியால் ஒதுங்கி போக கூடாதென என சொல்லி, அதனை திறக்கிறார், நன்மையே பயக்கிறது. உணவுகளை சேமித்து வைத்த மனிதர்களுக்கு நன்றி சொல்லும் அவனின் மனம் வருடி செல்கிறது.

104 பக்கத்தில் ஒப்பிய அவன் கண்ணம், 105 பக்கத்தில் நன்கு சாப்பிட்ட பின் சதை போட்ட அவன் கன்னங்கள், சித்திரக்காருக்கு கைதட்டல்.

இந்த பூட்டுகள் போன்று தான் நம்மில் சிலர் முதல் முயற்சியில் தரும் வேதனைகளிலும் காயங்களிலும் இரண்டாவது முயற்சியை எடுப்பதில்லை.

உணவை பகிர்ந்திட தன் தந்தை மனதை சம்மத்திக்க வைத்திடும் போது, இந்த உலகில் புதிதாய் உருவாகிடும் தலைமுறையிடம் மானிடம் முற்றிலுமாக அழியாமல் தழைத்திருக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

143 - பக்கத்தில் அவன் தந்தை திருடிய நபரிடம் நடந்திட்ட விதத்தை ஏற்று கொள்ள இயலாமல் அவன் அழுத போது, அவன் அழுகை என்னையும் ஆட்கொண்டது , இந்த இடத்தில் சித்திரம் மிக அருமை, அவன் உள்ள குமுறல்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் சித்திரக்கார் Manu. என்னால் சிறிது நேரத்துக்கு தொடர முடியவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டதும் எனக்கும் பிடிக்கவில்லை. அடுத்த பக்கத்தில் தந்தையை மசிய வைக்கும் வசனங்கள் பேசி அவரை நல்லது செய்ய வைக்கிறான். அவர் வேண்டுமென்றே செய்யவில்லை அவரது சூழ்நிலை என புரிதலுடன் பேசுவது மிக மிக அருமை. தன் தந்தை நல்லவர் என்ற பிம்பத்தை அவர் உடைக்காமல் இருந்தது நெஞ்சுக்கு இதம்.

பயணத்தை மீண்டும் தொடர்ந்திட போது அதுவரை இலைமறை காயாக இருந்த கொடூரத்தை காண நேரிடுகிறான் சிறுவன், தொடரவும் முடியாமல், கீழே வைக்கவும் முடியாமல் அடுத்தது என்ன பார்த்திடுவோம் என தொடர்ந்திட்டேன். கடல் கருப்பு வெள்ளையிலும் தந்தை தனயனுடன் ரசிக்க முடிந்தது, எதிர்பார்த்த பொலிவை இழந்துள்ளது என புரிந்து கொள்ள முடிந்தது. முடிவு நான் எதிர்பார்த்திடவில்லை, ஆனால் அவன் தந்தை அவனை தயார் படுத்தி உள்ளார் என்பது உறுதியாக தெரிந்தது.




வசனங்கள் இயல்பாக உணர்ச்சி பூர்வமாய் எழுதப்பட்டிருப்பது தந்தை மகனுக்குமான உரையாடல்களில் நம்மை ஒன்ற வைக்கிறது. "தம்பு" சகோதர்கள் சொன்னதுதான், நானும் ரசித்தேன். சாரி தம்பு ரொம்பவே மனதை கனக்க செய்தது. இறுதியில் அந்த தந்தை பேசிடும் வசனங்களில் மனம் கனத்து அழுகை வந்துவிட்டது.

விலை: 400 

ஒரு  தரமான மேக்கிங் இந்த புத்தகம்.. தன் காமிக்ஸ் வட்டத்தை நன்கு தெரிந்து வைத்து குறைவான விலையில் நிறைவான படைப்பாய் தந்துள்ளார், பதிப்பாரிசியர் திரு.  விஜயன் அவர்கள்.






Friday, May 16, 2025

விச்சு & கிச்சு ஸ்பெஷல் 1





லயன்-முத்து காமிக்ஸ் புத்தகங்களில் கடைசி பக்கங்களிலோ, அல்லது பின்னட்டையிலோ, அலங்கரித்திடும் இந்த இரட்டையர் ஜோடி சிரிக்க வைக்க தவறியதே இல்லை.

 கிச்சு எப்போதும் விச்சு சொல்வதை கேளாமல், விச்சுவையும் மற்றவர்களையும் மட்டம் தட்டி கொண்டு, தன்னை பற்றி சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் நபர், விச்சுவோ இவருக்கு நேர் எதிர், உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் - புத்திசாலி, பொறுமை, கவனிப்பது ஆகிய திறன்களை கொண்டதில்லாமல் மற்றவர்களுக்கு மரியாதை குடுக்கும் பழக்கமும் உள்ள நபர்.

கிச்சு அடித்திடும் கூத்துகளில், விச்சு இறுதியில் வந்து நான் சொன்னது நீதான்பா தப்பா புரிஞ்சுகிட்ட, நீதான்பா காது குடுத்து கேட்கலை என சொல்வது அல்டிமேட்😂😉😁

அவர்கள் குணங்களுக்கு ஏற்ப, அவர்கள் உடல்மொழியில் வெளிபடும் விதமாய் ஓவியங்களும் வரைய பட்டிருக்கும், அதுவும் கிச்சுவின் முகபாவனைகள் சிரிப்பலைகள் கொண்டு வந்திடும்😂😂😂😂😂

ஃபில்லர் பக்கங்களில் வந்திட்ட போதும், முக்கால்வாசி நேரம் கதை படிக்கும் முன்னே இவர்களை படித்து விடும் பழக்கம் இருந்தது.

இப்போது இவர்கள் தனியே வருவது இவர்களின் வெற்றிக்கு சான்று.


வசனங்கள் அருமையோ அருமை

 பனிக்காலத்திலே உன்னாலே சளியைக் கூடப் பிடிக்க முடியாது

 ஸ்வெட்டர் போட்ட அரைக்கால்படி

Enjoyed the dialogues


 விச்சு & கிச்சுக்கு ஒரு பெரிய ஜே

Wednesday, May 7, 2025

அடிமையாய் தோர்கல்



சுதந்திரம் நாங்க உனக்கு குடுக்கிறோம், சந்தோசமா என ராஜா கேட்க தாங்கள் கூறும் அர்த்தமற்றது என்கிறான் தோர்கல். உண்மைதானே.

அடிமையாம் அடிமை, மயங்கி கிடந்தவங்களை கடத்தி கொண்டு வந்து அடிமைன்னு சொல்கின்றவங்க நாகரீகமானவங்க, சுய மரியாதையுடன் வாழனும்னு நினைக்கிற தோர்கல் காட்டுமிராண்டி, ஒரு வார்த்தை கேட்டாங்களா

யாருங்க நீங்க எல்லாம், எப்படி பாலைவனத்தில் வந்தீங்க, எதாவது உதவி வேணுமா, அட அதுவும் வேண்டாம், ஊழியம் செய், சம்பளம் தரோம்,  இல்லை இல்லை தூக்கிட்டு வந்த ஆளுங்களுக்கு உடம்பு திடசாலியாக உள்ளது, கேட்கிறது யாருமில்லை, நீ என் அடிமை நம்மை போன்ற ஒரு மனிதன் என்று  கூட மதிப்பில்லை. 

தோர்கல் புத்திசாலிதனமாக செயல்பட்டு ஒரு வேலையை வாங்கி கொள்கிறான், அவன் குடும்ப அவனுடன் இருக்க இவிங்க அனுமதி வேணுமாம், என்ன கொடுமையாட இது.

தன் குடும்பத்திற்காக பொறுமை காக்கிறான் தோர்கல்,   அதிமேதாவிகளாக வாழ்ந்து வந்த நட்சத்திர மண்டலத்தின் மக்களான இலேனியா மற்றும் டியாகோவிற்கு இந்த புதிய உலகம் கடினமே, பொறுமை காக்க முடியவில்லை, ஆனாலும் அவர்களை அமைதி காக்க சொல்வதும் தவறே, அண்டம் தாண்டி வந்மு பூமியல் வாழும் சக மனிதர்களிடம் அடிமையாய் கிடப்பதை எப்படி பொறுத்து கொள்ள முடியும்.

தோர்கல் போன்று கடவுளரின் விதியில் இல்லாததால் இவ்வளவு கஷ்டமா என்று  நினைக்க தோன்றினாலும், அப்போ அங்கே இருக்கும் மற்ற அடிமைகள் என்ற கேள்வியும் தோன்றுகிறது.

ஹெராக்குளிஸ்க்கு இறந்தாலும் பளிங்கு கற்களால் கல்லறை செய்யப்படும் என்று சொல்லும்போது கோபம் தான் வருகிறது, 

சக மனிதனை வந்திப்பதில் குரூரம் கண்ட அவனுக்கு அப்படியொரு கல்லறை, இலேனியாவுக்கு யார் இருக்கா, அல்லது ஒரு இடம் தான் உண்டா அவளுக்கு கல்லறை கட்ட?

தனி மனித சுதந்திரம் இக்கதையில் ஒரு கேள்வி குறியாகிறது


 கிறிஸ் ஆப் வல்நார்


ராஜா ஆரிசியாவிடம், உன்னை நல்லாதானே வைச்சு இருக்கேன், அடிமையாவே நல்லா வாழு என்கிறார், சுயமாக இருக்க விரும்பும் மனிதர்கள் மீது அடக்குமுறை செலுத்திவிட்டு தான் பெரியவன் என்று காமிப்பது பெயர் ராஜாவா?

கிறிஸ் ஆப் வல்நாரை பிடிக்காது, ஆனால் அவள் இறக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭😭😭

இப்படியொரு ராட்சசி கண்ணீரை வரவைக்க முடியுமா???

ஆரிஸியாவும், கிறிஸும் கட்டி பிடித்து விடை பெற்று கொள்ளும்போது, நெஞ்சு 😢😢😢😢😢, அங்கே நடந்த மௌன மொழியில் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பரிமாறி கொள்ளப்பட்டன.

போகாதே கிறிஸ் என் மனம் அழுதது ....வயசான உருவம் கொண்டபோது, அப்படியே அவ இருக்கட்டும், ஜோலனை கடத்திய போது பாலைவனத்தில் அவ இறந்த போகட்டும் என நினைத்த இந்த மனதுதான் அழுதது.

 அவள் வாழ்க்கையே ஒரு போராட்டமாக தான் அமைந்திருந்தது

கிறிஸின் குழந்தை தோர்கலுடையது என புரிபடும் போது ஆரிசியாவின் மனதில்  ஏற்படும் ரௌத்திர உணர்ச்சிகளை முகத்தில்  அழுத்தமாக சித்திர படுத்தியுள்ளார்கள், எங்கே அந்த குழந்தையை பிராண்டி விடுவாளோ என்ற அளவுக்கு தோன்றிற்று. 

ஜோலனிடம் தோர்கலை போன்று இரக்க குணம் உள்ளது, ஆபத்தான சமயத்தில் கூட கிறிஸுக்கு உதவி செய்கிறான்.

இயற்கை காட்சிகள் செம, தென்றல் வீசிடும் மலைகள், ஆர்பரித்து அமைதி காக்கும் கடல், பிரமாண்ட மாளிகைகள், கதைக்கு சித்திரங்கள் பக்கபலம், ஒவ்வொரு காட்சியிலும் வண்ண சேர்க்கைகள் அட்டகாசம்.

வைக்கிங்ஸ் ஆக்ரோஷமான ஆட்கள் தான், சண்டையில் ஜெயித்தால் சக ஆளாக அவர்களிடம் வாழலாம், ஆனால் இங்குள்ள மக்கள் மனதில் அவர்களிடம் எத்தனை அடிமைகள் இருக்கோ அவ்வளவு பெருமை என்று நினைக்கும் நாகரீக மனிதர்கள். இவர்களிடம் லாஜிக்கோ, சண்டையிட்டு ஜெயிப்பதோ ஆகாத காரியம், சாமர்த்தியம் தான் உதவும்.

ஆஸ்ட்ரிக்ஸ் & ஓபளீக்ஸ் கதையில் ரோம நகரில் அடிமை வியாபாரம் கதை ஞாபகம் வந்தது, இக்கதையில் வரும் மேல் மட்ட மக்கள் உடைகள்,  ராஜாவின் உடைகளும் நடவடிக்கைகளூம் , அடிமை முறையும், சிலைகள், கட்டிங்கள் விளையாட்டு போட்டிகளும் ரோம அரசாங்கத்தை நினைவூட்டவதாக இருந்தது, தோர்கல் உலகம் ரோம அரசாங்க பகுதியையும் கடந்து செல்வதாக கூறுகின்றனரா?

இந்த இரு தோர்கல் அத்தியாங்கள் சோகம், மனதை கனமாக்கி விடுகின்றன.

Wednesday, December 18, 2024

Magic Moment Special - டெக்ஸ் வில்லர்

 



அட்டைப்படத்தில் துப்பாக்கி சூட்டிற்கு இறுமாப்புடன் நிற்கும் டெக்ஸ், என்ன சும்மா ஒரு அஞ்சு நிமிடங்கள் விளையாட்டு காட்டி இருப்பார் அதை எடுத்து அட்டைபடத்தில் போட்டுடாங்கனு பார்த்தா, ஹ்கூம் இல்லை என்கிறது கதை. 

கதை நெடுகிலும் அடைப்பட்டு கிடந்தாலும், டெக்ஸ் வீழ்ச்சியில் லாபம் காண காத்திருக்கும் இருநாட்டு குள்ளநரி ஜாம்பவானகள் திட்டங்களில், டெக்ஸ் எவ்வளவு பெரிய இம்பேக்ட் உள்ளவர் என காட்டப்படுகிறது.

மனதுக்கு தெரியும் டெக்ஸ் தப்பி விடுவார் என்று, இருந்தாலும் ஒருவித பதற்றம் ஒட்டி கொண்டது,  ஏனென்றால் டெக்ஸ் யோசித்து ஆக்ஷன் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்க, கார்சன், கிட் மற்றும் டைகர் ஜாக் லேட்டாக வராங்க, எனக்கோ டென்ஷன் டென்ஷன்

சுடுவானா மாட்டானோ என பதற்றதுடன், டெக்ஸ் எப்படி தப்பிக்க போகிளார், அவரும் சரி இப்படியே ஆகட்டும்மிக கூலாக நிற்க, கார்சனையும் காணாம செம பதற்றம், இல்லை டெக்ஸை சுடுறது என் திட்டம் இல்லை சொல்லும்போது, அடேய் ஓலிவேரா டெக்ஸ் மட்டும் உன்னை சுக்கா கறி ஆக்கல, நான் உன்னை சுக்கா கறி போட்டுறுவேன்னு மனசுல நினைத்து கொண்டேன்

 இக்கதையில் பிடித்த கேரக்டர் *பாதிரியார் இலியாஸ்* , போராட்ட குணம் உள்ளது என்று பாராட்டபடும்போது, அபசகுணமாக பேசாதே என்று கூறும் பாதிரியார் இலியாஸ் திட்டங்களை வெகு நேர்த்தியாக வகுத்து தருகிறார்.  அவரை பொறுத்தவரை நல்ல உள்ளங்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்றோம், கையில் ஆயுதம் ஏந்தி இன்னொரு உயிரை துன்புறுத்த மாட்டேன் என்ற கொள்கேயில் இருக்கிறார்.

இந்த கதையில் டெக்ஸ் டீம்க்கு ப்ரேக் பாயிண்ட் அவர் மூலம் தான் கிடைக்கிறது, அவரது ப்ளானிங் செம, முந்நாட்களில் ஒரு சிறந்த வீரன் மட்டுமல்ல, சிறந்த மதியூகி ஆக இருந்திருப்பார் என காட்டுகிறது

எப்போதும் அடுத்தவர்களை *ணங் ணங்  என கும்மி* கொண்டே இருக்கும் டெக்ஸ் அடைந்து கிடைக்க வேண்டியதாக உள்ளது, இரண்டு மூணு தடவை தலைவலியுடன் நான் எங்கே இருக்கேன்னு கேட்கிறார், ஆனாலும் கிடைக்கும் வாய்ப்பில் ஸாரோவை மட்டும் போட்டு துவைக்கிறார்.அடிவாங்கிட்டு ஸாரோ பேசிடும் வெத்து வசனங்கள் காமெடிதான்.

ஓவியங்கள் : ஆஹா ஓஹோ என்ற சொல்ல முடியாது, அதே போல் மோசம் என்றும் சொல்ல முடியாது, கதைக்கு நன்றாக உள்ளது, கதை வேகத்துக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. 

கதையை விறுவிறுப்புடன் வைத்திருக்கின்றனர், மேஜிக் மூமன்ட் ஸ்பெஷல்-க்கு ஏற்ற கதைதான்.

Thursday, January 11, 2024

ராபின் - கொலை நோக்கு பார்வை


விபத்து என்ற கண்ணோட்டதில் கொலையுடன் ஆரம்பிக்கும் கதை பார்ட்டிக்கு ரெடியாக இருக்கும் ஏஜெண்ட் ராபினை அழைக்கிறது

தன் கடந்த கால புலனாய்வு ஃபைல் ஒன்றை ப்ளாஷ்பேக்கில் திறக்கிறார், ராபின்



கொலைகள் நடக்கின்றன, கிடைக்கும் தடயங்கள் தெளிவாக இல்லை, பணம் பரிமாற்றம் நடக்கவில்லை, சதிகாரர்கள் சந்தித்து கொள்ளவில்லை,

ஒன்று மட்டும் தெளிவாக இருக்கிறது அது கொலை செய்வதற்கான நோக்கம்

ஆனால் தொடர்பில்லாமல் காணப்படுகிறது

கொலை நோக்கோடு தடயங்களை தொடர்புபடுத்தி

புதிரை விடுவிக்கின்றனர் நம் டிடெக்டிவ் குழு

ஆல்பி, ஜிம்மி மற்றும் மேட், இவர்களின் பங்காற்றாலால் கொலைகாரர்களின் அடையாளம் கண்டுபிடிக்கபடுகின்றன

அப்ப ராபின் என்ன வேலை, அவருடையது தான் அந்த "கொலை நோக்கு பார்வை"


வேட்கை விளிம்பில் நிற்கும் மனிதர்களை பயன்படுத்தி கொண்டுள்ளான் அதிகார எனும் போதைக்காக ஒருவன் என்று தெரிய வருகிறது

முதல் கொலையாளி யாரென்று தெரியாமல் கேஸ் நமக்கு முடிவடைய நாம் திருப்பி நிகழ்காலத்திற்கு அழைக்கபடுகிறோம், அது விபத்தல்ல கொலை என்ற சந்தேகம் போலீஸாராக்கு வருகிறது


ஆணித்தரமான சாட்சியங்கள் இல்லாவிட்டாலும், தொடர்பின்றி சில தடயங்களே இருந்தாலும் போலீஸின் சந்தேகப் பார்வையால் சாதித்துவிட முடியும் என்பதற்கு இக்கதை ஓரு உதாரணம்


தனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மனிதனை சுய ஆதாயத்திற்காக கொலை செய்ய துணிகின்றனர் சில மனிதர்கள்

நன்றியுணர்ச்சி என்ற உந்துதலிலா, செய்யாவிட்டால் தமது உயிர் போய்விடும் என்ற பயத்திலா, அல்லது இரண்டுமேவா

இன்னொரு உயிரை கொன்ற குற்றய உணர்ச்சி மட்டும் இல்லை

அவர்களே அறியாமல் தொடர்பில்லாத சங்கிலி கொலைகளுக்கு ஆட்படித்தி கொள்கின்றனர்

விபரீதத்தை புரிந்து கொண்டு முதலில் ஆட்டுவிப்பவனை பிடிக்கிறது போலீஸ்


என் கடைக்கு தீ வைத்தபோது அதை போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என்று டோனி சொல்லும்போது அவன் வலியை உணராமல் கடந்து செல்ல முடியாது


கதை விறுவிறுப்பு இருந்தது, மார்வினின் வழக்கமான காமெடிகளை காண முடிந்தது.

இதைப் போன்ற வித்தியாசமான கதைகளை போட்டால் ராபின் ஹிட்டடிப்பார். இவ்வருடத்தில் ராபின் கதையில் இதுதான் சூப்பர்.

நல்ல இன்வெஸ்டிகெஷன் ஸ்டோரி.

ஓவியங்கள் தெளிவு, அருமை

ரூபின் - 96 மணி நேரங்கள்




அதுவொரு பனிக்காலம் என ஆரம்பிக்கும் ஓவியங்கள்  

அங்கு நடந்தேறிடும் ஒரு க்ரைம் புதிர்


பனியின் குளிரோ மேயரின் மேடை பேச்சோ உப்புமாவை போன்றது  மேயரின் துணைவியாருக்கு. 

இந்த மேயரின் மனைவியிடம் மாட்டி கொள்கிறார் நம் துப்பறியும் கதாநாயகி ரூபின். அவங்க வீட்ல ஒரு திருட்டு நடக்குது, ரூபின் தான் கேஸ பார்த்துக்கனும் என்று கேட்கிறாங்க, சாதாரன திருட்டு கேஸூக்கு நாம் எதுக்கு என்று நொந்து கொண்டே செல்கிறார்.  சரி நம்ம வேலையை செய்வோம் என்று கடமையை செய்கிறார்.  கைரேகை  தடயங்கள் ஆட்டம் காண்பிக்கின்றன. மேயரின் மனைவி  திரும்ப அழைத்து உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறார்.

நம்ம டிடெக்டிவ் யாருக்கும் தெரியாமல் புதிருக்குள் நுழைய ஆரம்பமாகிறது "96 மணி நேரங்கள்"



நட்புன்னா என்னனு தெரியுமா, அதுக்கு பெயர் க்ளெண்டா என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்கிறார் தோழி

மனைவி மீது அக்கறை காட்டும் கணவனாக ஜார்விஸ்

நீ ஒரு அதிர்ஷ்டகாரி என்று எண்ணும் முன்பே விதி விளையாடுகிறது

ஜூலியா மனசாட்சி உறுத்தலால் உண்மையை சொல்லி விடுகிறாள்

எங்களுக்கு உங்க வாக்குமூலத்தை தவிர வேற எந்த சாட்சியமும் இல்லை புதிய பறவை படத்தில் எம்.ஆர்.ராதா வசனம்

பேசுவார், அதை போல் இங்கு கொலை நடந்ததற்கான சாட்சி ஜூலியாவின் வாக்குமூலத்தை தவிர வேறு எதுவும் இல்லை

சடலம் கிடைக்கவில்லை இன்னார்  என்று அறியவும் வழியில்லை

ஆனால் திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கபடுகிறது


வருடங்கள் பல கடந்த பின்னே மீண்டும் பனியல் ஒருநாள்,  குறும்பக்கார இருவரால் ஒரு பிராங்க் வீடியோ எடுக்க படுகிறது.  படம் பிடிக்கபட்ட நபர் யார்? 

இதற்கும் மேயர் வீட்டில் நடக்கும் திருட்டுக்கும் என்ன சம்பந்தம்? 

திருட்டில் கிடைக்கும் கைரேகைகள் இறந்து போன ஜூலியாவுடையது தான? 

இறந்து போனதாக கருதப்படும் ஜூலியா எப்படி தப்பி பிழைத்தார்? 

இதற்கிடையே  இன்னொரு நபர் துப்பு துலக்கிறார். யாரிவர்? இவர் ஏன் இதை செய்ய வேண்டும்? ரூபினிடம் இருப்பவர் உண்மையைதான் பேசுகிறாரா?


கேள்விகளுக்கு விடை கிடைக்க புதிர்கள் விடுபடுகின்றன


ஆரம்பத்தில்  நடக்கும் கொலையில் சில உறுத்தல்கள் இருந்து கொண்டே இருந்தன

க்ளெண்ட்டால் எப்படி ஒரு ஆணின்  எடையை அதுவும் சடலத்தை எளிதாக தூக்கி செல்ல முடிகிறது என்று

மற்றும் அவ்வளவு நெருக்எத்தில் ரத்தபொக்கு கொஞ்சம் வந்திருக்க வேண்டும், அது என்னவோ திருஷ்டி பொட்டுடாட்டும் ரத்தத்துளி. பின்னர் க்ளெண்டா பனியில் சீக்கரமாக உடலை தூக்கி போட்டு வந்துவிடும் நேரமும் உறுத்தலாக இருந்தது. 

ஜூலியாவை சரியாக கணித்து வைத்துள்ளனர் அவள் தோழியும், கணவரும்.


வெள்ளைப்பனி பார்க்க அழகு என்றாலும், பனியன் குளிர்கரங்களோ  ரசிக்க முடியாத கொடுமைக்கார ராட்சனாக இருக்கிறது, விமான விபத்தில் ஜூலியா தப்பித்தது வரமா சாபமா என்ற அளவுக்கு ஆகிவிடுகிறது நிலைமை. புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது என்று பாட்டு பாடும் அளவுக்கு ஆரம்பத்தில் செல்பவள் "ரெவணன்ட்" லியோ டிகாப்பிரியோ மாதிரி ஆகிவிடும் நிலைமை

கோடைமலரின் கடைசி பக்கங்களில்  உள்ள ஓவியம் பனியன் ஆட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.



நான் கவனித்து தவறாக கணித்த ஒன்று

பக்கம் 61-இல் ஒரு பேணலில் வருவதை ஓவிய பிழை கருதினேன், கதையின் புதிர் விடுபடும் போதுதான் சந்தேகம் வந்திருக்க வேண்டிய இடம் என்று உறைத்தது.

ஆசிரியரும் ஓவியரும் சிறப்பாக இதனை செய்து உள்ளார்கள். பாராட்டுகள் பல.


பனியின் ஓவியங்களை பாராட்டிட வேண்டும் அவ்வளவு அழகாக தத்ருபமாக்கி இருக்கிறார்கள்.


பாத்திர படைப்புகள் சிறப்பு. 

மேட்ஜ்ஜை பாராட்டிட வேண்டும். ஜூலியாவை பார்த்து கொண்டதும் இல்லாமல் புதிரை விடுவிக்க அவளுக்கு உதவுவது பெரிய மனது. ஜுலியாவுக்கு கிடைத்த ஒரு நல்ல நட்பு

மேயரின் மனைவி தொல்லை படுத்துபவர் போல் தோன்றினாலும் மனிதர்களை எடை போடுவதில் சமர்த்து, மேட்ஜ் மற்றும் நம்ம ரூபினின் திறமை மேல் வைக்கும் நம்பிக்கைகள அதை பறைசாற்றுகின்றன.



ரூபினை கலாய்க்கும் சக ஆபிஸர்கள் பேச்சுகள்,  மேயர் போலீஸாரிடம் டாக்டர்களிடமும்  பேசியதை கிண்டல் செய்யும் இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன, கிண்டல் செய்யும் வசனங்கள் அருமை 


ரூபின் கதைகளை வாசித்ததில் எனது பார்வையில்  நான் பார்த்த  ஒற்றுமைகள் 

உண்மைகள் வெளிவர சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளால் சம்பந்தபட்டவர்களை தேடி செல்கிறது.

அதுக்கென்று ஒரு உயிர் இருந்து சரியான நேரம் பார்த்து ஒரு முயற்சி  எடுப்பது போல் தோன்றியது

நேர்கோடு என்று ஒன்று செல்லும் கணித்து விடலாம்,  இடியாப்ப சிக்கல் என்று ஒன்று இருக்கும், நாம் ஊகிக்க தவறிவிடுவோம்.

நேர்கோடு சுலபமாக இருந்தாலும், கதையினை நகர்த்தி செல்லும் விதம் படிக்க சுவாரஸ்யமனதாக  படைக்கபட்டுள்ளது.  


பெண் கதாநாயகியர் இல்லாத குறையை ரூபின் தீர்க்கிறார். நீதி காவலர் பணியில் இருப்பது, அவர் நிலைத்து நிற்க ஒரு கூடுதல் காரணமனதாக கருதுகிறேன் . 

மற்றும் ரூபின் சோ க்யூட்😊😊😊

தோர்கல் - மரணத்தின் நிறம் நீலம்




கடலின் சீற்றத்தினால் பிரிந்த தோர்கல் குடும்பம் அரெக்னியாவின் சாப விமோசனத்திற்கு பிறகு தீவில் ஒன்று சேர்கின்றனர். அங்கே தங்கிவிட வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் தோர்கல் வேறு புதிய இடம் தேட எத்தனித்து படகை செப்பனிட்டு கிளம்ப ஆயத்தமாகிறார். ஜோலனின் நண்பர்கள் அத்தீவிலேயே தங்கிவிட விருப்பம் தெரிவிக்க, கூடவே மப்ஃ பும் விட்டு செல்ல நேரிட, பிரிவின் வலியை முதல் முறையாக உணர்கிறான் ஜோலன். தீவின் மக்களின் அன்போடு விடைபெற்று பயணத்தை மேற்கொள்ளும் தோர்கல் குடும்பம்.

பத்து நாளுக்கு பிறகு  கண்ணில் படும் தனித்து விடப்பட்ட படகை ஆராய்கின்றனர். ஆபத்தை வாங்கிருக்கிறோம் என்றயறியாமல் அதனை கடந்து செல்ல கடற்கொள்ளையர்கள என அவர்கள் நினைக்கும் குள்ளர்களிடமிருந்து தப்பியோடும் முயற்சியில் ஜார்காஜ் என்னும் இளவரசனை சந்திக்கிறார்கள். அவன் அவர்களுக்கு தங்க இடமும், உணவும், ஓய்வு எடுக்கவும்  வசதிகள் செய்து தருகிறான். தோர்கல் சந்தேக கண்ணோட பார்க்க, ஆரிசியா இளவரசனுக்கு நல்கிய குணம் என்கிறாள்.  படகை செப்பனிட்ட நேரமும்  கிடைக்க பெற இளவரசனின் மாளிகையில் தங்கி பொழுதை கழித்து விட்டு கிளம்ப எத்தனிக்கிறார்கள்.  அப்பொழுது மறைந்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வெளிவர, அங்கிருக்கும் ஒவ்வொரும் நொடியிலும் மரணத்தின் நிறம் நீலமாக மாறும் என்பதை தெரிந்து கொள்கிறார்கள் தோர்கல் குடும்பம், மரணத்தின் பிடியிலிருந்து   தன் குடும்பத்தை காப்பாற்றிட  ஆபத்து நிறைந்த தடைகளை தாண்டி சென்று உதவி பெற்றிட விழைகிறார், தோர்கல். என்ன ஆபத்துகளை சந்திக்க போகிறார், அவைகளை முறியடித்து தன் உயிராக கருதிடம் குடும்பத்தை காப்பாற்றினார என்பது கதை.


ஒரு சாமன்யானாக தன் குடும்பத்தோடு நேசமுடன் வாழ்க்கையை வாழு விரும்பும் தோர்கல். அப்படி ஒரு இடம் புறப்படுகிறார், ஆனால் வழி நெடுகிலும் ஆபத்துகளுக்கு பஞ்சமில்லை.

பிரபஞ்சத்தின் புதல்வனே, அப்படியே போகும் வழியெல்லாம் தென்படும் துயரங்களை அழித்து நல்லது நடக்க துணை புரிவாயாக என்பதாக இருக்கிறது கடவுளர்களின் வரம்.

தங்களால் புரிந்து கொள்ளபடாத மாற்று மக்களை ஒதுக்கி வைப்பதில் சமூகம் என்றும் தவறியதில்லை, இங்கயும் அப்படியே உயரத்தில் குறைவு கண்டவர்களை விரட்டி விட்டதும் அல்லாமல், கெட்ட பெயரும் சேர்த்து பரப்பி விடபட்டுள்ளது. அந்த நல்ல மனிதர்களை சந்தித்து அவர்களின் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது தோர்கலுக்கு.

தோர்கல் தன் நோயோடு ஒவ்வொரு தடையாக தாண்டி சென்று கொண்டிருக்க, காத்திருக்கும் ஒவ்வொரு நாளும் கொடுமையானதாக போகிறது தோர்கல் குடும்பத்தினருக்கு. சக மனிதர்களின் இறப்பை காண நேரிடும் பரிதாபம், மற்றும் நாளொரு நாளாக வளர்ந்து வரும் நோயின் தீவிரம். மனவலியை கவனிப்பதா அல்லது உடல்வலியை கவனிப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலை.


எவ்வழியும் இன்றி இறந்திடுவோம் என்று தெரிந்தும் நோய் முற்றி தீவிரம் அடையும் வரை காத்திருக்கும் மக்கள்,   ஜீவன் இருக்கும் வரை  எதொவொரு வழி கிடைத்திடாத என்ற மானிடத்தின் நம்பிக்கையை காமிக்கிறது.


ஜாஜ்கார் மற்றும் ஜார்காஜ் இடம் மாறி இருந்தால் குணம் மாறி இருக்குமோ, ஒருவேளை சகோதரர்கள் பிரிய நேரிடாமல் இருந்திருந்தால், குணங்கள் எவ்வாறு இருந்திருக்கும்🤔🤔🤔

 

தோர்கல் அங்கே வராவிடில் அங்கு உள்ள மனிதர்களுக்கு விடிவு கிடைத்திருக்குமோ 

இங்குதான் கடவுளர்களின் மேல் சந்தேகம் வருகிறது, தோர்கல் மூலமாக மக்களுக்கு விடிவு கிடைக்க செய்வது. அவர் முழுதாக காரணம் இல்லை என்றாலும், ஒரு கருவியாக பயன்படுகிறார். 

இந்த ஆல்பத்தை வித்தியாசபடுத்தி காட்டிய ஒன்று ஜோலனை கதைசொல்லியாக காட்டியது. வளர்ந்து வரும் பதின் பருவத்து சிறுவனின் பார்வையில்  தந்தையை காண்கிறோம். அது மட்டுமல்ல வளர்ச்சி பெற்று  வரும் அவனது உணர்வுகளையும் மாற்றம் கண்டு வரும் ஜோலனை காண்பிக்கிறார் ஆசிரியர். தந்தை போல் வளர பிரியபடும் அவன் காதலை சொல்ல மனத்திடமும், எதிரியை சண்டையிட்டு ஜெயிக்க உடல்திறனும் தன்னிடம் இல்லை என்றறிருந்து அமைதி காக்கிறான். 


ஸ்பிலிட் ஓவியங்கள், சாகாவரத்தின் சாவி கதையில் பார்த்தது, மறுபடியும் இக்கதையில் பயன்படுத்தி உள்ளனர். இங்கே தோர்கல் வெற்றி என்றறியாத முயற்சியில் இருட்டான ஆற்றின் அடியில் நீந்தி செல்வதை காண்பிக்க அருமையாக சித்திரபடுத்தி உள்ளனர். 


இங்கே இன்னொரு சித்திரத்தையும் பாராட்டியாக வேண்டும். ஜார்காஜ் மற்றும் ஜாஜ்கார் சித்திரங்களை உடல் மொழியில் வித்தியாசபடுத்தி காட்டி உள்ளார், ஏனென்றால் ஜாஜ்காரை பார்த்தவுடன் உருவத்தில் அவனை இளவரசனை போல் இருந்தாலும் இளவரசன் இல்லை என்பதை முதல் அறிமுகத்திலே புரிகிறது. 


ஓவியங்கள்   அருமையோ அருமை. 

கதையும் சுவாரஸ்யமானதாக படைக்கபட்டுள்ளது. வான்ஹாம்மே வானஹாம்மே தான்


2014 பின் பாதியில் அறிமுகம் ஆன தோர்கல் மீது ஏற்பட்ட க்ரஷ் இன்று வரை தொடர்கறது😁😁😁

வான்ஹாம்மே பற்றி நான் தேடி தெரிந்து கொள்ள முக்கிய காரணமாக இருந்தவர் தோர்கல்.