Wednesday, December 18, 2024

Magic Moment Special - டெக்ஸ் வில்லர்

 



அட்டைப்படத்தில் துப்பாக்கி சூட்டிற்கு இறுமாப்புடன் நிற்கும் டெக்ஸ், என்ன சும்மா ஒரு அஞ்சு நிமிடங்கள் விளையாட்டு காட்டி இருப்பார் அதை எடுத்து அட்டைபடத்தில் போட்டுடாங்கனு பார்த்தா, ஹ்கூம் இல்லை என்கிறது கதை. 

கதை நெடுகிலும் அடைப்பட்டு கிடந்தாலும், டெக்ஸ் வீழ்ச்சியில் லாபம் காண காத்திருக்கும் இருநாட்டு குள்ளநரி ஜாம்பவானகள் திட்டங்களில், டெக்ஸ் எவ்வளவு பெரிய இம்பேக்ட் உள்ளவர் என காட்டப்படுகிறது.

மனதுக்கு தெரியும் டெக்ஸ் தப்பி விடுவார் என்று, இருந்தாலும் ஒருவித பதற்றம் ஒட்டி கொண்டது,  ஏனென்றால் டெக்ஸ் யோசித்து ஆக்ஷன் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்க, கார்சன், கிட் மற்றும் டைகர் ஜாக் லேட்டாக வராங்க, எனக்கோ டென்ஷன் டென்ஷன்

சுடுவானா மாட்டானோ என பதற்றதுடன், டெக்ஸ் எப்படி தப்பிக்க போகிளார், அவரும் சரி இப்படியே ஆகட்டும்மிக கூலாக நிற்க, கார்சனையும் காணாம செம பதற்றம், இல்லை டெக்ஸை சுடுறது என் திட்டம் இல்லை சொல்லும்போது, அடேய் ஓலிவேரா டெக்ஸ் மட்டும் உன்னை சுக்கா கறி ஆக்கல, நான் உன்னை சுக்கா கறி போட்டுறுவேன்னு மனசுல நினைத்து கொண்டேன்

 இக்கதையில் பிடித்த கேரக்டர் *பாதிரியார் இலியாஸ்* , போராட்ட குணம் உள்ளது என்று பாராட்டபடும்போது, அபசகுணமாக பேசாதே என்று கூறும் பாதிரியார் இலியாஸ் திட்டங்களை வெகு நேர்த்தியாக வகுத்து தருகிறார்.  அவரை பொறுத்தவரை நல்ல உள்ளங்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்றோம், கையில் ஆயுதம் ஏந்தி இன்னொரு உயிரை துன்புறுத்த மாட்டேன் என்ற கொள்கேயில் இருக்கிறார்.

இந்த கதையில் டெக்ஸ் டீம்க்கு ப்ரேக் பாயிண்ட் அவர் மூலம் தான் கிடைக்கிறது, அவரது ப்ளானிங் செம, முந்நாட்களில் ஒரு சிறந்த வீரன் மட்டுமல்ல, சிறந்த மதியூகி ஆக இருந்திருப்பார் என காட்டுகிறது

எப்போதும் அடுத்தவர்களை *ணங் ணங்  என கும்மி* கொண்டே இருக்கும் டெக்ஸ் அடைந்து கிடைக்க வேண்டியதாக உள்ளது, இரண்டு மூணு தடவை தலைவலியுடன் நான் எங்கே இருக்கேன்னு கேட்கிறார், ஆனாலும் கிடைக்கும் வாய்ப்பில் ஸாரோவை மட்டும் போட்டு துவைக்கிறார்.அடிவாங்கிட்டு ஸாரோ பேசிடும் வெத்து வசனங்கள் காமெடிதான்.

ஓவியங்கள் : ஆஹா ஓஹோ என்ற சொல்ல முடியாது, அதே போல் மோசம் என்றும் சொல்ல முடியாது, கதைக்கு நன்றாக உள்ளது, கதை வேகத்துக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. 

கதையை விறுவிறுப்புடன் வைத்திருக்கின்றனர், மேஜிக் மூமன்ட் ஸ்பெஷல்-க்கு ஏற்ற கதைதான்.