Thursday, January 11, 2024

ராபின் - கொலை நோக்கு பார்வை


விபத்து என்ற கண்ணோட்டதில் கொலையுடன் ஆரம்பிக்கும் கதை பார்ட்டிக்கு ரெடியாக இருக்கும் ஏஜெண்ட் ராபினை அழைக்கிறது

தன் கடந்த கால புலனாய்வு ஃபைல் ஒன்றை ப்ளாஷ்பேக்கில் திறக்கிறார், ராபின்



கொலைகள் நடக்கின்றன, கிடைக்கும் தடயங்கள் தெளிவாக இல்லை, பணம் பரிமாற்றம் நடக்கவில்லை, சதிகாரர்கள் சந்தித்து கொள்ளவில்லை,

ஒன்று மட்டும் தெளிவாக இருக்கிறது அது கொலை செய்வதற்கான நோக்கம்

ஆனால் தொடர்பில்லாமல் காணப்படுகிறது

கொலை நோக்கோடு தடயங்களை தொடர்புபடுத்தி

புதிரை விடுவிக்கின்றனர் நம் டிடெக்டிவ் குழு

ஆல்பி, ஜிம்மி மற்றும் மேட், இவர்களின் பங்காற்றாலால் கொலைகாரர்களின் அடையாளம் கண்டுபிடிக்கபடுகின்றன

அப்ப ராபின் என்ன வேலை, அவருடையது தான் அந்த "கொலை நோக்கு பார்வை"


வேட்கை விளிம்பில் நிற்கும் மனிதர்களை பயன்படுத்தி கொண்டுள்ளான் அதிகார எனும் போதைக்காக ஒருவன் என்று தெரிய வருகிறது

முதல் கொலையாளி யாரென்று தெரியாமல் கேஸ் நமக்கு முடிவடைய நாம் திருப்பி நிகழ்காலத்திற்கு அழைக்கபடுகிறோம், அது விபத்தல்ல கொலை என்ற சந்தேகம் போலீஸாராக்கு வருகிறது


ஆணித்தரமான சாட்சியங்கள் இல்லாவிட்டாலும், தொடர்பின்றி சில தடயங்களே இருந்தாலும் போலீஸின் சந்தேகப் பார்வையால் சாதித்துவிட முடியும் என்பதற்கு இக்கதை ஓரு உதாரணம்


தனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மனிதனை சுய ஆதாயத்திற்காக கொலை செய்ய துணிகின்றனர் சில மனிதர்கள்

நன்றியுணர்ச்சி என்ற உந்துதலிலா, செய்யாவிட்டால் தமது உயிர் போய்விடும் என்ற பயத்திலா, அல்லது இரண்டுமேவா

இன்னொரு உயிரை கொன்ற குற்றய உணர்ச்சி மட்டும் இல்லை

அவர்களே அறியாமல் தொடர்பில்லாத சங்கிலி கொலைகளுக்கு ஆட்படித்தி கொள்கின்றனர்

விபரீதத்தை புரிந்து கொண்டு முதலில் ஆட்டுவிப்பவனை பிடிக்கிறது போலீஸ்


என் கடைக்கு தீ வைத்தபோது அதை போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என்று டோனி சொல்லும்போது அவன் வலியை உணராமல் கடந்து செல்ல முடியாது


கதை விறுவிறுப்பு இருந்தது, மார்வினின் வழக்கமான காமெடிகளை காண முடிந்தது.

இதைப் போன்ற வித்தியாசமான கதைகளை போட்டால் ராபின் ஹிட்டடிப்பார். இவ்வருடத்தில் ராபின் கதையில் இதுதான் சூப்பர்.

நல்ல இன்வெஸ்டிகெஷன் ஸ்டோரி.

ஓவியங்கள் தெளிவு, அருமை

ரூபின் - 96 மணி நேரங்கள்




அதுவொரு பனிக்காலம் என ஆரம்பிக்கும் ஓவியங்கள்  

அங்கு நடந்தேறிடும் ஒரு க்ரைம் புதிர்


பனியின் குளிரோ மேயரின் மேடை பேச்சோ உப்புமாவை போன்றது  மேயரின் துணைவியாருக்கு. 

இந்த மேயரின் மனைவியிடம் மாட்டி கொள்கிறார் நம் துப்பறியும் கதாநாயகி ரூபின். அவங்க வீட்ல ஒரு திருட்டு நடக்குது, ரூபின் தான் கேஸ பார்த்துக்கனும் என்று கேட்கிறாங்க, சாதாரன திருட்டு கேஸூக்கு நாம் எதுக்கு என்று நொந்து கொண்டே செல்கிறார்.  சரி நம்ம வேலையை செய்வோம் என்று கடமையை செய்கிறார்.  கைரேகை  தடயங்கள் ஆட்டம் காண்பிக்கின்றன. மேயரின் மனைவி  திரும்ப அழைத்து உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறார்.

நம்ம டிடெக்டிவ் யாருக்கும் தெரியாமல் புதிருக்குள் நுழைய ஆரம்பமாகிறது "96 மணி நேரங்கள்"



நட்புன்னா என்னனு தெரியுமா, அதுக்கு பெயர் க்ளெண்டா என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்கிறார் தோழி

மனைவி மீது அக்கறை காட்டும் கணவனாக ஜார்விஸ்

நீ ஒரு அதிர்ஷ்டகாரி என்று எண்ணும் முன்பே விதி விளையாடுகிறது

ஜூலியா மனசாட்சி உறுத்தலால் உண்மையை சொல்லி விடுகிறாள்

எங்களுக்கு உங்க வாக்குமூலத்தை தவிர வேற எந்த சாட்சியமும் இல்லை புதிய பறவை படத்தில் எம்.ஆர்.ராதா வசனம்

பேசுவார், அதை போல் இங்கு கொலை நடந்ததற்கான சாட்சி ஜூலியாவின் வாக்குமூலத்தை தவிர வேறு எதுவும் இல்லை

சடலம் கிடைக்கவில்லை இன்னார்  என்று அறியவும் வழியில்லை

ஆனால் திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கபடுகிறது


வருடங்கள் பல கடந்த பின்னே மீண்டும் பனியல் ஒருநாள்,  குறும்பக்கார இருவரால் ஒரு பிராங்க் வீடியோ எடுக்க படுகிறது.  படம் பிடிக்கபட்ட நபர் யார்? 

இதற்கும் மேயர் வீட்டில் நடக்கும் திருட்டுக்கும் என்ன சம்பந்தம்? 

திருட்டில் கிடைக்கும் கைரேகைகள் இறந்து போன ஜூலியாவுடையது தான? 

இறந்து போனதாக கருதப்படும் ஜூலியா எப்படி தப்பி பிழைத்தார்? 

இதற்கிடையே  இன்னொரு நபர் துப்பு துலக்கிறார். யாரிவர்? இவர் ஏன் இதை செய்ய வேண்டும்? ரூபினிடம் இருப்பவர் உண்மையைதான் பேசுகிறாரா?


கேள்விகளுக்கு விடை கிடைக்க புதிர்கள் விடுபடுகின்றன


ஆரம்பத்தில்  நடக்கும் கொலையில் சில உறுத்தல்கள் இருந்து கொண்டே இருந்தன

க்ளெண்ட்டால் எப்படி ஒரு ஆணின்  எடையை அதுவும் சடலத்தை எளிதாக தூக்கி செல்ல முடிகிறது என்று

மற்றும் அவ்வளவு நெருக்எத்தில் ரத்தபொக்கு கொஞ்சம் வந்திருக்க வேண்டும், அது என்னவோ திருஷ்டி பொட்டுடாட்டும் ரத்தத்துளி. பின்னர் க்ளெண்டா பனியில் சீக்கரமாக உடலை தூக்கி போட்டு வந்துவிடும் நேரமும் உறுத்தலாக இருந்தது. 

ஜூலியாவை சரியாக கணித்து வைத்துள்ளனர் அவள் தோழியும், கணவரும்.


வெள்ளைப்பனி பார்க்க அழகு என்றாலும், பனியன் குளிர்கரங்களோ  ரசிக்க முடியாத கொடுமைக்கார ராட்சனாக இருக்கிறது, விமான விபத்தில் ஜூலியா தப்பித்தது வரமா சாபமா என்ற அளவுக்கு ஆகிவிடுகிறது நிலைமை. புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது என்று பாட்டு பாடும் அளவுக்கு ஆரம்பத்தில் செல்பவள் "ரெவணன்ட்" லியோ டிகாப்பிரியோ மாதிரி ஆகிவிடும் நிலைமை

கோடைமலரின் கடைசி பக்கங்களில்  உள்ள ஓவியம் பனியன் ஆட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.



நான் கவனித்து தவறாக கணித்த ஒன்று

பக்கம் 61-இல் ஒரு பேணலில் வருவதை ஓவிய பிழை கருதினேன், கதையின் புதிர் விடுபடும் போதுதான் சந்தேகம் வந்திருக்க வேண்டிய இடம் என்று உறைத்தது.

ஆசிரியரும் ஓவியரும் சிறப்பாக இதனை செய்து உள்ளார்கள். பாராட்டுகள் பல.


பனியின் ஓவியங்களை பாராட்டிட வேண்டும் அவ்வளவு அழகாக தத்ருபமாக்கி இருக்கிறார்கள்.


பாத்திர படைப்புகள் சிறப்பு. 

மேட்ஜ்ஜை பாராட்டிட வேண்டும். ஜூலியாவை பார்த்து கொண்டதும் இல்லாமல் புதிரை விடுவிக்க அவளுக்கு உதவுவது பெரிய மனது. ஜுலியாவுக்கு கிடைத்த ஒரு நல்ல நட்பு

மேயரின் மனைவி தொல்லை படுத்துபவர் போல் தோன்றினாலும் மனிதர்களை எடை போடுவதில் சமர்த்து, மேட்ஜ் மற்றும் நம்ம ரூபினின் திறமை மேல் வைக்கும் நம்பிக்கைகள அதை பறைசாற்றுகின்றன.



ரூபினை கலாய்க்கும் சக ஆபிஸர்கள் பேச்சுகள்,  மேயர் போலீஸாரிடம் டாக்டர்களிடமும்  பேசியதை கிண்டல் செய்யும் இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன, கிண்டல் செய்யும் வசனங்கள் அருமை 


ரூபின் கதைகளை வாசித்ததில் எனது பார்வையில்  நான் பார்த்த  ஒற்றுமைகள் 

உண்மைகள் வெளிவர சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளால் சம்பந்தபட்டவர்களை தேடி செல்கிறது.

அதுக்கென்று ஒரு உயிர் இருந்து சரியான நேரம் பார்த்து ஒரு முயற்சி  எடுப்பது போல் தோன்றியது

நேர்கோடு என்று ஒன்று செல்லும் கணித்து விடலாம்,  இடியாப்ப சிக்கல் என்று ஒன்று இருக்கும், நாம் ஊகிக்க தவறிவிடுவோம்.

நேர்கோடு சுலபமாக இருந்தாலும், கதையினை நகர்த்தி செல்லும் விதம் படிக்க சுவாரஸ்யமனதாக  படைக்கபட்டுள்ளது.  


பெண் கதாநாயகியர் இல்லாத குறையை ரூபின் தீர்க்கிறார். நீதி காவலர் பணியில் இருப்பது, அவர் நிலைத்து நிற்க ஒரு கூடுதல் காரணமனதாக கருதுகிறேன் . 

மற்றும் ரூபின் சோ க்யூட்😊😊😊

தோர்கல் - மரணத்தின் நிறம் நீலம்




கடலின் சீற்றத்தினால் பிரிந்த தோர்கல் குடும்பம் அரெக்னியாவின் சாப விமோசனத்திற்கு பிறகு தீவில் ஒன்று சேர்கின்றனர். அங்கே தங்கிவிட வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் தோர்கல் வேறு புதிய இடம் தேட எத்தனித்து படகை செப்பனிட்டு கிளம்ப ஆயத்தமாகிறார். ஜோலனின் நண்பர்கள் அத்தீவிலேயே தங்கிவிட விருப்பம் தெரிவிக்க, கூடவே மப்ஃ பும் விட்டு செல்ல நேரிட, பிரிவின் வலியை முதல் முறையாக உணர்கிறான் ஜோலன். தீவின் மக்களின் அன்போடு விடைபெற்று பயணத்தை மேற்கொள்ளும் தோர்கல் குடும்பம்.

பத்து நாளுக்கு பிறகு  கண்ணில் படும் தனித்து விடப்பட்ட படகை ஆராய்கின்றனர். ஆபத்தை வாங்கிருக்கிறோம் என்றயறியாமல் அதனை கடந்து செல்ல கடற்கொள்ளையர்கள என அவர்கள் நினைக்கும் குள்ளர்களிடமிருந்து தப்பியோடும் முயற்சியில் ஜார்காஜ் என்னும் இளவரசனை சந்திக்கிறார்கள். அவன் அவர்களுக்கு தங்க இடமும், உணவும், ஓய்வு எடுக்கவும்  வசதிகள் செய்து தருகிறான். தோர்கல் சந்தேக கண்ணோட பார்க்க, ஆரிசியா இளவரசனுக்கு நல்கிய குணம் என்கிறாள்.  படகை செப்பனிட்ட நேரமும்  கிடைக்க பெற இளவரசனின் மாளிகையில் தங்கி பொழுதை கழித்து விட்டு கிளம்ப எத்தனிக்கிறார்கள்.  அப்பொழுது மறைந்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வெளிவர, அங்கிருக்கும் ஒவ்வொரும் நொடியிலும் மரணத்தின் நிறம் நீலமாக மாறும் என்பதை தெரிந்து கொள்கிறார்கள் தோர்கல் குடும்பம், மரணத்தின் பிடியிலிருந்து   தன் குடும்பத்தை காப்பாற்றிட  ஆபத்து நிறைந்த தடைகளை தாண்டி சென்று உதவி பெற்றிட விழைகிறார், தோர்கல். என்ன ஆபத்துகளை சந்திக்க போகிறார், அவைகளை முறியடித்து தன் உயிராக கருதிடம் குடும்பத்தை காப்பாற்றினார என்பது கதை.


ஒரு சாமன்யானாக தன் குடும்பத்தோடு நேசமுடன் வாழ்க்கையை வாழு விரும்பும் தோர்கல். அப்படி ஒரு இடம் புறப்படுகிறார், ஆனால் வழி நெடுகிலும் ஆபத்துகளுக்கு பஞ்சமில்லை.

பிரபஞ்சத்தின் புதல்வனே, அப்படியே போகும் வழியெல்லாம் தென்படும் துயரங்களை அழித்து நல்லது நடக்க துணை புரிவாயாக என்பதாக இருக்கிறது கடவுளர்களின் வரம்.

தங்களால் புரிந்து கொள்ளபடாத மாற்று மக்களை ஒதுக்கி வைப்பதில் சமூகம் என்றும் தவறியதில்லை, இங்கயும் அப்படியே உயரத்தில் குறைவு கண்டவர்களை விரட்டி விட்டதும் அல்லாமல், கெட்ட பெயரும் சேர்த்து பரப்பி விடபட்டுள்ளது. அந்த நல்ல மனிதர்களை சந்தித்து அவர்களின் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது தோர்கலுக்கு.

தோர்கல் தன் நோயோடு ஒவ்வொரு தடையாக தாண்டி சென்று கொண்டிருக்க, காத்திருக்கும் ஒவ்வொரு நாளும் கொடுமையானதாக போகிறது தோர்கல் குடும்பத்தினருக்கு. சக மனிதர்களின் இறப்பை காண நேரிடும் பரிதாபம், மற்றும் நாளொரு நாளாக வளர்ந்து வரும் நோயின் தீவிரம். மனவலியை கவனிப்பதா அல்லது உடல்வலியை கவனிப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலை.


எவ்வழியும் இன்றி இறந்திடுவோம் என்று தெரிந்தும் நோய் முற்றி தீவிரம் அடையும் வரை காத்திருக்கும் மக்கள்,   ஜீவன் இருக்கும் வரை  எதொவொரு வழி கிடைத்திடாத என்ற மானிடத்தின் நம்பிக்கையை காமிக்கிறது.


ஜாஜ்கார் மற்றும் ஜார்காஜ் இடம் மாறி இருந்தால் குணம் மாறி இருக்குமோ, ஒருவேளை சகோதரர்கள் பிரிய நேரிடாமல் இருந்திருந்தால், குணங்கள் எவ்வாறு இருந்திருக்கும்🤔🤔🤔

 

தோர்கல் அங்கே வராவிடில் அங்கு உள்ள மனிதர்களுக்கு விடிவு கிடைத்திருக்குமோ 

இங்குதான் கடவுளர்களின் மேல் சந்தேகம் வருகிறது, தோர்கல் மூலமாக மக்களுக்கு விடிவு கிடைக்க செய்வது. அவர் முழுதாக காரணம் இல்லை என்றாலும், ஒரு கருவியாக பயன்படுகிறார். 

இந்த ஆல்பத்தை வித்தியாசபடுத்தி காட்டிய ஒன்று ஜோலனை கதைசொல்லியாக காட்டியது. வளர்ந்து வரும் பதின் பருவத்து சிறுவனின் பார்வையில்  தந்தையை காண்கிறோம். அது மட்டுமல்ல வளர்ச்சி பெற்று  வரும் அவனது உணர்வுகளையும் மாற்றம் கண்டு வரும் ஜோலனை காண்பிக்கிறார் ஆசிரியர். தந்தை போல் வளர பிரியபடும் அவன் காதலை சொல்ல மனத்திடமும், எதிரியை சண்டையிட்டு ஜெயிக்க உடல்திறனும் தன்னிடம் இல்லை என்றறிருந்து அமைதி காக்கிறான். 


ஸ்பிலிட் ஓவியங்கள், சாகாவரத்தின் சாவி கதையில் பார்த்தது, மறுபடியும் இக்கதையில் பயன்படுத்தி உள்ளனர். இங்கே தோர்கல் வெற்றி என்றறியாத முயற்சியில் இருட்டான ஆற்றின் அடியில் நீந்தி செல்வதை காண்பிக்க அருமையாக சித்திரபடுத்தி உள்ளனர். 


இங்கே இன்னொரு சித்திரத்தையும் பாராட்டியாக வேண்டும். ஜார்காஜ் மற்றும் ஜாஜ்கார் சித்திரங்களை உடல் மொழியில் வித்தியாசபடுத்தி காட்டி உள்ளார், ஏனென்றால் ஜாஜ்காரை பார்த்தவுடன் உருவத்தில் அவனை இளவரசனை போல் இருந்தாலும் இளவரசன் இல்லை என்பதை முதல் அறிமுகத்திலே புரிகிறது. 


ஓவியங்கள்   அருமையோ அருமை. 

கதையும் சுவாரஸ்யமானதாக படைக்கபட்டுள்ளது. வான்ஹாம்மே வானஹாம்மே தான்


2014 பின் பாதியில் அறிமுகம் ஆன தோர்கல் மீது ஏற்பட்ட க்ரஷ் இன்று வரை தொடர்கறது😁😁😁

வான்ஹாம்மே பற்றி நான் தேடி தெரிந்து கொள்ள முக்கிய காரணமாக இருந்தவர் தோர்கல்.