Showing posts with label தோர்கல். Show all posts
Showing posts with label தோர்கல். Show all posts

Wednesday, May 7, 2025

அடிமையாய் தோர்கல்



சுதந்திரம் நாங்க உனக்கு குடுக்கிறோம், சந்தோசமா என ராஜா கேட்க தாங்கள் கூறும் அர்த்தமற்றது என்கிறான் தோர்கல். உண்மைதானே.

அடிமையாம் அடிமை, மயங்கி கிடந்தவங்களை கடத்தி கொண்டு வந்து அடிமைன்னு சொல்கின்றவங்க நாகரீகமானவங்க, சுய மரியாதையுடன் வாழனும்னு நினைக்கிற தோர்கல் காட்டுமிராண்டி, ஒரு வார்த்தை கேட்டாங்களா

யாருங்க நீங்க எல்லாம், எப்படி பாலைவனத்தில் வந்தீங்க, எதாவது உதவி வேணுமா, அட அதுவும் வேண்டாம், ஊழியம் செய், சம்பளம் தரோம்,  இல்லை இல்லை தூக்கிட்டு வந்த ஆளுங்களுக்கு உடம்பு திடசாலியாக உள்ளது, கேட்கிறது யாருமில்லை, நீ என் அடிமை நம்மை போன்ற ஒரு மனிதன் என்று  கூட மதிப்பில்லை. 

தோர்கல் புத்திசாலிதனமாக செயல்பட்டு ஒரு வேலையை வாங்கி கொள்கிறான், அவன் குடும்ப அவனுடன் இருக்க இவிங்க அனுமதி வேணுமாம், என்ன கொடுமையாட இது.

தன் குடும்பத்திற்காக பொறுமை காக்கிறான் தோர்கல்,   அதிமேதாவிகளாக வாழ்ந்து வந்த நட்சத்திர மண்டலத்தின் மக்களான இலேனியா மற்றும் டியாகோவிற்கு இந்த புதிய உலகம் கடினமே, பொறுமை காக்க முடியவில்லை, ஆனாலும் அவர்களை அமைதி காக்க சொல்வதும் தவறே, அண்டம் தாண்டி வந்மு பூமியல் வாழும் சக மனிதர்களிடம் அடிமையாய் கிடப்பதை எப்படி பொறுத்து கொள்ள முடியும்.

தோர்கல் போன்று கடவுளரின் விதியில் இல்லாததால் இவ்வளவு கஷ்டமா என்று  நினைக்க தோன்றினாலும், அப்போ அங்கே இருக்கும் மற்ற அடிமைகள் என்ற கேள்வியும் தோன்றுகிறது.

ஹெராக்குளிஸ்க்கு இறந்தாலும் பளிங்கு கற்களால் கல்லறை செய்யப்படும் என்று சொல்லும்போது கோபம் தான் வருகிறது, 

சக மனிதனை வந்திப்பதில் குரூரம் கண்ட அவனுக்கு அப்படியொரு கல்லறை, இலேனியாவுக்கு யார் இருக்கா, அல்லது ஒரு இடம் தான் உண்டா அவளுக்கு கல்லறை கட்ட?

தனி மனித சுதந்திரம் இக்கதையில் ஒரு கேள்வி குறியாகிறது


 கிறிஸ் ஆப் வல்நார்


ராஜா ஆரிசியாவிடம், உன்னை நல்லாதானே வைச்சு இருக்கேன், அடிமையாவே நல்லா வாழு என்கிறார், சுயமாக இருக்க விரும்பும் மனிதர்கள் மீது அடக்குமுறை செலுத்திவிட்டு தான் பெரியவன் என்று காமிப்பது பெயர் ராஜாவா?

கிறிஸ் ஆப் வல்நாரை பிடிக்காது, ஆனால் அவள் இறக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭😭😭

இப்படியொரு ராட்சசி கண்ணீரை வரவைக்க முடியுமா???

ஆரிஸியாவும், கிறிஸும் கட்டி பிடித்து விடை பெற்று கொள்ளும்போது, நெஞ்சு 😢😢😢😢😢, அங்கே நடந்த மௌன மொழியில் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பரிமாறி கொள்ளப்பட்டன.

போகாதே கிறிஸ் என் மனம் அழுதது ....வயசான உருவம் கொண்டபோது, அப்படியே அவ இருக்கட்டும், ஜோலனை கடத்திய போது பாலைவனத்தில் அவ இறந்த போகட்டும் என நினைத்த இந்த மனதுதான் அழுதது.

 அவள் வாழ்க்கையே ஒரு போராட்டமாக தான் அமைந்திருந்தது

கிறிஸின் குழந்தை தோர்கலுடையது என புரிபடும் போது ஆரிசியாவின் மனதில்  ஏற்படும் ரௌத்திர உணர்ச்சிகளை முகத்தில்  அழுத்தமாக சித்திர படுத்தியுள்ளார்கள், எங்கே அந்த குழந்தையை பிராண்டி விடுவாளோ என்ற அளவுக்கு தோன்றிற்று. 

ஜோலனிடம் தோர்கலை போன்று இரக்க குணம் உள்ளது, ஆபத்தான சமயத்தில் கூட கிறிஸுக்கு உதவி செய்கிறான்.

இயற்கை காட்சிகள் செம, தென்றல் வீசிடும் மலைகள், ஆர்பரித்து அமைதி காக்கும் கடல், பிரமாண்ட மாளிகைகள், கதைக்கு சித்திரங்கள் பக்கபலம், ஒவ்வொரு காட்சியிலும் வண்ண சேர்க்கைகள் அட்டகாசம்.

வைக்கிங்ஸ் ஆக்ரோஷமான ஆட்கள் தான், சண்டையில் ஜெயித்தால் சக ஆளாக அவர்களிடம் வாழலாம், ஆனால் இங்குள்ள மக்கள் மனதில் அவர்களிடம் எத்தனை அடிமைகள் இருக்கோ அவ்வளவு பெருமை என்று நினைக்கும் நாகரீக மனிதர்கள். இவர்களிடம் லாஜிக்கோ, சண்டையிட்டு ஜெயிப்பதோ ஆகாத காரியம், சாமர்த்தியம் தான் உதவும்.

ஆஸ்ட்ரிக்ஸ் & ஓபளீக்ஸ் கதையில் ரோம நகரில் அடிமை வியாபாரம் கதை ஞாபகம் வந்தது, இக்கதையில் வரும் மேல் மட்ட மக்கள் உடைகள்,  ராஜாவின் உடைகளும் நடவடிக்கைகளூம் , அடிமை முறையும், சிலைகள், கட்டிங்கள் விளையாட்டு போட்டிகளும் ரோம அரசாங்கத்தை நினைவூட்டவதாக இருந்தது, தோர்கல் உலகம் ரோம அரசாங்க பகுதியையும் கடந்து செல்வதாக கூறுகின்றனரா?

இந்த இரு தோர்கல் அத்தியாங்கள் சோகம், மனதை கனமாக்கி விடுகின்றன.